தமிழ் வளர்த்த வீரமாமுனிவருக்கு திமுக அரசு செய்யும் மரியாதை இது தானா ?-கடம்பூர் செ.ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்;

கோவில்பட்டி பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும்,அதிமுக ஆட்சியின் போது, கொண்டுவரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தவும், திறக்கவும் திமுக அரசு தாமதப்படுத்தி வருகிறது.

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் அதிமுக ஆட்சிகாலத்தில் வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.தற்பொழுது பணிகள் முடிவுற்ற நிலையில் 4 முறை திறப்பு விழா அறிவிக்கப்பட்டும், தற்பொழுது வரை திறக்கப்படவில்லை. தமிழ் வளர்த்த வீரமாமுனிவருக்கு திமுக அரசு செய்யும் மரியாதை இது தானா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.விரைவாக வீரமாமுனிவர் மண்டபத்தினை திறக்க வேண்டும்.‌இதே போன்று திருச்சியில் மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர், நீதிகட்சியின் ஏ.டி.பன்னீர்செல்வம், தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார் என்று போற்றப்பட்ட எம்.கே. தியாகராஜர் பாகவதருக்கு என ஒரு வளாகத்தில் மணிமண்டபம் அமைக்க அதிமுக ஆட்சியில் பணிகள் தொடக்கப்பட்டது.

அந்த பணிகள் முடிவுற்று 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த மணிமண்டபங்கள் திறக்கப்படவில்லை. இதனால் அவை சமூக விரோதிகளின் கூடரமாக மாறியுள்ளது. திமுக அரசு புதிய திட்டங்களை கொண்டு வரவில்லை என்றாலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தினால் போதும் என்றும்,
விவசாயிகள் பயிர்காப்பீடு செலுத்த டிசம்பர் மாதம் வரை கால நீட்டிப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள் பயிர்காப்பீடு பெறமுடியாத நிலை உள்ளது.இந்தாண்டு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,மக்களுக்கு சிகிச்சை அளிக்கதான் மருத்துவதுறை, ஆனால் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்குதான் சிகிச்சை அளிக்க வேண்டும்,அமைச்சர் மா.சுப்பிரமணியன் சரியான மனநிலையில் இருப்பதாக தெரியவில்லை, தமிழகத்தில் இன்றைக்குள்ள அரசு மருத்துவமனைகளின் நிலையை சுட்டிக்காட்டினால் அதனை சரி செய்ய வேண்டும், தமிழகத்தில் மர்மான வைரஸ் காய்ச்சல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற மருத்துவமனையில் இடம் இல்லமால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர், போதிய மருத்துவர்கள், மருந்துகள் இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், மருந்துகள் இல்லை என சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எடுத்துரைத்துள்ளனர். சுகாதாரத்துறை பற்றி அடிப்படை புரிதல் கூட இல்லாதவரை சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம் செய்தது முதல்வரின் தவறு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை மாற்றி, சுகாதாரத்துறையை காப்பாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிமுக பற்றி பேச டி.டிவி.தினகரனுக்கு என்ன உரிமை இருக்கிறது.அவர் வேறு கட்சி தொடங்கி செயல்பட்டு வருகிறார். அவருக்கு அதிமுக பற்றி பேச தர்மீக உரிமை இல்லை என்றும், தேர்தலுக்கு முன்பு அதிமுக அமைச்சர்கள் தேர்தலுக்கு பின்னர் சிறைசெல்வார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்
ஆனால் இன்றைக்கு அவர் அமைச்சரவையில் இருக்கும் செந்தில்பாலாஜி தான் சிறையில் இருக்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்க கூட உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இன்றைக்குள்ள தமிழக அமைச்சர்கள் வருமானத்துறை, அமலாக்கதுறை மற்றும் நீதிமன்றம் செல்வதற்கு தான் நேரம் இருக்கிறது.அவர்கள் எப்படி நிர்வாகத்தினை பார்ப்பார்கள். இது தமிழகத்தின் இன்றைய நிலை என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற்று வர வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் என்றார்.