அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் இன்று தீர்ப்பு….

அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ. பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளில் முதலில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இருப்பினும், இந்த வழக்குகளின் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்ய சூமோட்டோ எனப்படும் தாமாகா முன்வந்து விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்துக் கொண்டுள்ளார். இருப்பினும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சூமோட்டோ வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதைச் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முடிவு செய்வார் என உத்தரவிட்டார். அதன் பிறகு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து இந்த சூமோட்டோ வழக்குகளை விசாரித்து வந்தார்.

இந்தச் சூழலில் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கில் விசாரணை முடிவடைந்து முடிந்துவிட்ட நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பளிக்க உள்ளார்.