தமிழ்நாட்டை சேர்ந்த ISRO விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா

இஸ்ரோவில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு பத்திரம்,நினைவுப் பரிசு வழங்கினார்.

இந்த விழாவில் ஒவ்வொரு விஞ்ஞானிகளின் சாதனைகள் குறித்தும் சில நிமிட குறும்படம் ஒளிபரபரப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து முதல்வர் நிகழ்ச்சியில் பேசுகையில்;- “இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை என அப்போது கேட்டவர் அண்ணா
அதனால், அவர் பெயரிலான இந்த அரங்கில், விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது என்றார்.