ஆசிய கோப்பை தொடர்:சூப்பர்-4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை

ஆசிய கோப்பை தொடர்:சூப்பர்-4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை…இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில் நாளை (செப்.10) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர்-4 சுற்றில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்தப் போட்டி இலங்கை பிரேமதேசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டி மழை காரணமாக இடையூறுகளை சந்தித்தால் ‘ரிசர்வ டே’-வான திங்கட்கிழமை அன்று போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.