ODI WC 2023 |பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் காட்டிய மன உறுதிதான் வெற்றிக்கு காரணம்- ரோஹித் சர்மா

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா-பாகிஸ்தான் அணிக்கு இடையிலான போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. இந்த ரோஹித் சர்மா 63 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் போட்டியில் எடுத்து ஷாகீன் ஷா அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார்.வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “பந்து வீச்சாளர்கள் தான் எங்களுக்கு ஆட்டத்தை அமைத்துக் கொடுத்தனர். அது 190 ரன்கள் சேர்க்கக்கூடிய ஆடுகளம் என்று நான் நினைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 280 ரன்களை சேர்க்கக்கூடும் என எதிர்பார்த்தோம். ஆனால் பந்து வீச்சாளர்கள் காட்டிய மன உறுதிதான் இதற்கு காரணம் என்றார்.