ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்:இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின.இந்த நிலையில் நாளை (செப்.10) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர்-4 சுற்றில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்தப் போட்டி இன்று பிற்பகல் 3.30 அணி அளவில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இந்தத் தொடரில் இரு அணிகளும் 2-வது முறையாக மோதுகின்றன. லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடேயே விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.