தூத்துக்குடி 38வது வார்டில் சீரான குடிநீர் வழங்க மேயர் உடனடி நடவடிக்கை!

தூத்துக்குடி 38வது வார்டில் சீரான குடிநீர் வழங்குவதற்கான உடனடி நடவடிக்கை எடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி…

தூத்துக்குடி மாநகராட்சி, 38வது வார்டுக்கு உட்பட்ட குமாரர் தெரு மற்றும் பங்களா தெரு ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டு வந்த குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக வந்த புகாரினையடுத்து புதிய வழித்தடத்தில் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கையை மேயர் ஜெகன் பெரியசாமி எடுத்தார்.

தொடர்ந்து அவர் இன்று மாலைக்குள் பணிகள் நிறைவுபெற்று அப்பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும் என்று கூறினார். மேயரின் உடனடி நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டினர். இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் கந்தசாமி, வட்ட கழக செயலாளர் கங்கா ராஜேஷ், கழக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.