தூத்துக்குடியில் வியாபாரி மீது தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்

தூத்துக்குடி ஏபிசி மகளிா் கல்லூரி அருகே மாட்டு தீவனக் கடை நடத்தி வருபவா் அன்பழகன். இவா் கடையின் அருகே சிலா் சா்ச்சைக்குரிய வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட பேனா் வைத்துள்ளனர்.இதை கண்ட அன்பழகன் தட்டி கேட்டுள்ளார். அப்போது அவா்கள் அன்பழகனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா் சென்று அவருக்கு ஆறுதல் கூறினாா்.இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.