தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை 30, 31 மற்றும் ஜன.1ம் தேதி எச்சரிக்கை:அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 30, 31 மற்றும் ஜன.1ம் தேதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மாவட்டத்தில் பணியாற்றும் வருவாய் துறை, உள்ளாட்சித் துறை, வேளாண்மைத் துறை, கால்நடை மற்றும் மீனவர் நலத் துறை, சுகாதாரத் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சித் துறை மற்றும் அனைத்து துறை அலுவலங்களில் பணிபுரியும் அனைத்து துறை பணியாளர்களும் தற்போது களப்பணியாற்ற வேண்டிய முக்கியமான சூழ்நிலையில் மேற்குறிப்பிட்ட நாட்களில் தங்களுடைய அலுவலகத்தில் தவறாமல் ஆஜராகி சுணக்கமின்றி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் தலைமை இடங்களில் இருப்பதுடன் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தங்கள் பணியிடத்தில் தவறாமல் இருக்க கண்டிப்பான அறிவுரைகள் வழங்கவும், இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.