‘குரூப் – 4’ தேர்வு-6,244 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு: விண்ணப்பிப்பது எப்படி? தெளிவாக விளக்கும் வீடியோ பதிவு…!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ‘குரூப் – 4’ தேர்வுகளை நடத்தவிருக்கிறது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், வனக்காவலர், வனக் கண்காணிப்பாளர் என 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் – 4 தேர்வுகளை அறிவித்துள்ளது.இதில், 108 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களும், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்களும், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன. குரூப் – 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி 30-ம் தேதி வெளியிடப்பட்டது. பிப்ரவரி 28-ம் தேதி நள்ளிரவுக்கு முன்பாக இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களில் மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் மார்ச் 4-ம் தேதி முதல் ஆறாம் தேதிக்குள் அந்தத் திருத்தங்களைச் செய்ய வாய்ப்பளிக்கப்படும். எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெறுகிறது.

கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களில் பெரும்பாலான பதவிகளுக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி; 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சில பணிகளுக்கு வயது வரம்பு இல்லை.

இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ, www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

• தூத்துக்குடி டைம்ஸ் • வாட்ஸ்அப்!
 https://chat.whatsapp.com/FWHq80qx4i9GGNt1m3ORk9

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/1_2024-Tam.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

குரூப் – 4′ தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தெளிவாக விளக்கும் வீடியோ பதிவு…!

https://www.youtube.com/watch?v=2Mx7gP2QBwg

உங்கள் விளம்பரம் மக்களிடம் சென்றடைய தொடர்பு கொள்ள வேண்டிய எண் :9655550896