தூத்துக்குடி வஉசி கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி வஉசி சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வஉசி கல்வியியல் கல்லூரியில் 2018 -2020, 2019-2021, 2020-2022 ஆகிய கல்வி ஆண்டுகளில் கல்வியியல் பாடங்களை படித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கும் பட்டமளிப்பு விழா
நடைபெற்றது.

வ.உ.சிதம்பரம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வஉசி கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் டி. கனகராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பி. மணிசங்கர் கலந்து கொண்டு 430 கல்வியியல் பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவில் வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜி.ராஜதுரை, உயிரியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜி. அமுதார ரஞ்சனி, உடற் கல்வியியல் உதவி பேராசிரியர் எம்.கவிதா மற்றும் வ.உ.சி கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.