நாரைக்கிணறு பகுதியில் காரில் வந்து ஆடு கடத்திய கும்பல்:3 பேர் கைது..!

தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காரில் வந்து ஆடு கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதன்வாழ்வு பகுதியை சேர்ந்த பரமசிவன் மனைவி பெருமாள்கனி (56) என்பவருக்கு சொந்தமான ஆடுகளை கடந்த 12.10.2023 அன்று வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் ஒரு ஆடு மற்றும் 2 ஆட்டுக்குட்டிகளை காரில் திருடி சென்றுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து பெருமாள்கனி அளித்த புகாரின் பேரில் நாரைக்கிணறு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், என். புதூர் பகுதியை சேர்ந்த தனசேகரன் மகன் கமலேஷ் கிரண் (21), ஓட்டப்பிடாரம் வடக்கு பரும்பூர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கணேசன் (எ) முருகன் (19), மருதன்வாழ்வு பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி மகன் பாலமுருகன் (20) மற்றும் இளஞ்சிறார் ஒருவர் ஆகியோர் சேர்ந்து மேற்படி பெருமாள்கனியின் வீட்டில் இருந்த ஆடு மற்றும் ஆட்டுக்குட்டிகளை காரில் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து நாரைக்கிணறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து காரில் வந்து ஆடு கடத்திய 4 பேரை கைது செய்தனர்.ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஆடு மற்றும் 2 ஆட்டுக்குட்டிகளையும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் கமலேஷ் கிரண் மீது திருச்சி மாவட்டம் கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், கணேசன் (எ) முருகன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் 6 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற ✅தூத்துக்குடி டைம்ஸ்✅வாட்ஸ் அப் செய்தி சேவையில் இணைந்திருங்கள்;

தூத்துக்குடி டைம்ஸ் channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46