திருச்செந்தூர் கோவிலில் முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு இலவச வேன் வசதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் முதியோர் மற்றும் உடல் ஊனமுற்ற பக்தர்களுக்கு பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு சென்றுவர தேவஸ்தானம் சார்பில் இலவச வேன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் தென்கிழக்கு மூலையில் கட்டணக் கழிப்பிடம் அருகில் 4 வேன்கள் இந்த சேவைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் இந்த வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.