நாளை (அக்-1) மாபெரும் மருத்துவ முகாம்

தூத்துக்குடி முஸ்லிம் ஜமாத்-மஸ்ஜித் தக்வா,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் தூத்துக்குடி பீ வெல் மருத்துவமனை, நெல்லை தி ஐ பவுண்டேஷன் ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை சிறுநீரகம் மற்றும் பொது மருத்துவ முகாம் நாளை (அக்-1) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திரேஸ்புரம் மஸ்ஜித் தக்வாவில் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் செய்து வருகின்றனர்.