வரும் 11ம் தேதி இலவச கண் பரிசோதனை முகாம்

தூத்துக்குடியில் வரும் 11ஆம் தேதி இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி என்.எல்.சி., அனல்மின் நிலையம் சிஎஸ்ஆர் திட்ட உதவியுடன் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் திரேஸ்புரம் அக்சிலியம் பள்ளி வளாகத்தில் வரும் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடத்துகின்றனர். இந்த முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து பிரச்சனை உள்ளவர்களுக்கு கண் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் கண்ணாடிகள், மருந்துகள் இலவசமாக முகாம் நடத்தும் இடத்திலேயே கிடைக்கும். நோயாளிகள் முகாம் தினத்தன்றே திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

அவர்களுக்கு உள்விழி லென்ஸ். அறுவை சிகிச்சை, மருத்துவம். தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் அனைத்தும் இலவசம். அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனை இலவசமாக செய்யப்படும். இந்த முகாமிற்கு வரும்போது பொதுமக்கள் முகவரி சான்றின் ஜெராக்ஸ் (வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் கார்டு, செல் நம்பர்) கொண்டு வர வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் விளம்பரம் மக்களிடம் சென்றடைய தொடர்பு கொள்ள வேண்டிய எண் :9655550896