தூத்துக்குடியில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…

தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் குரூப் 4 தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2024-ஆம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலில் TNPSC Group-IV / VAO தேர்விற்கு 6244 பணிக்காலியிடங்கள் அறிவிப்பு 30.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. TNPSC Group-IV / VAO தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை நேரத்தில் நடைபெறும். இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாதிரி தேர்வுகளும் நடைபெறும். TNPSC Group-IV / VAO தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் இணைந்து பயன் பெறலாம். பயிற்சி வகுப்பு தொடர்பான கூடுதல் விபரங்களை 0461-2003251 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

மேற்குறிப்பிட்டுள்ள TNPSC Group-IV / VAO போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் தங்களது கல்விச்சான்றிதழ் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரடியாக தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.