தூத்துக்குடி:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ.,எர்ணாவூர் நாராயணன்

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஏரல் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண உதவித் தொகையும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாழவள்ளானில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஶ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவரும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான முன்னாள் எம்.எல்.ஏ.,எர்ணாவூர் நாராயணன் பங்கேற்று மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், துணைச் செயலாளர் அருள்செல்வன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் அந்தோணி ஜெபராஜ் ,உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலாஜி, ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜ் கருங்குளம் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் ஏரல் நகரச் செயலாளர் லோகநாதன், ஒன்றிய நிர்வாகிகள் மகேஸ் , நந்தகுமார் P.பாலா ,மதன், மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

• தூத்துக்குடி டைம்ஸ் • வாட்ஸ்அப்!
 https://chat.whatsapp.com/FWHq80qx4i9GGNt1m3ORk9

விளம்பரம் தொடர்புக்கு:9789625946-செய்தி தொடர்புக்கு:9655550896