தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் விழா; முன்னாள் எம்.எல்.ஏ.,எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார்.மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில துணைப் பொதுச் செயலாளர் காமராசு நாடார், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை நாடார், பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவரும், நாடார் பேரவை மாநில தலைவரும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான முன்னாள் எம்.எல்.ஏ.,எர்ணாவூர் நாராயணன் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்.இதில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள் ஜேசு செல்வி, பொன்மணி, ராதா லட்சுமி ,ஜெயராணி முத்து ராதா, ராணி, பாக்கியலட்சுமி மற்றும் நிர்வாகிகள் பொங்கலிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல் பொருளாளர் பழனிவேல், துணைச் செயலாளர் அந்தோணி சேவியர், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், பிரதிநிதி பெரியசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், துணைச் செயலாளர் அருள்செல்வன், மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்து செல்வம், வர்த்தக அணி துணைச் செயலாளர் கணபதி, விவசாய அணி துணைச் செயலாளர் ஜெபராஜ், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகர அவை தலைவர் மதியழகன், பொருளாளர் சந்தன குமார், ஒன்றிய செயலாளர்கள் அந்தோணிராஜா, அமல்ராஜ், பாலாஜி, சதீஷ் மூர்த்தி வார்டு செயலாளர்கள் ஐசக், பொன் சுகுமார், துரைச்சாமி, அத்தியப்பன், பார்த்திபன், மகாராஜா, சப்தம், ராமஜெயம் வெற்றிவேல், சுந்தர், காமராஜ், சூர்யா, ஐசக் இஸ்ரவேல், பாலகிருஷ்ணன், ராமர் உள்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

• தூத்துக்குடி டைம்ஸ் • வாட்ஸ்அப்!
 https://chat.whatsapp.com/FWHq80qx4i9GGNt1m3ORk9

விளம்பரம் தொடர்புக்கு:9789625946-செய்தி தொடர்புக்கு:9655550896