முதல் டி.20 போட்டி: விசாகப்பட்டினத்தில் இன்று இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 டி-20 போட்டி கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. 2வது போட்டி 26ம் தேதி திருவனந்தபுரம், 3வது போட்டி 28ம் தேதி கவுகாத்தி, 4வது போட்டி டிசம்பர் 1ம் தேதி ராய்ப்பூர், கடைசி போட்டி பெங்களூருவில் டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது.

முதல் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் நேற்று முதல் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா கணுக்கால் காயம் காரணமாக ஆடாத நிலையில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உலக கோப்பையில் ஆடியவர்களில் சூர்யகுமார், இஷான்கிஷன் மட்டும் டி.20 அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு முதல் டி-20 போட்டி விசாகப்பட்டினத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இதனை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்திய உத்தேச அணி :

ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால்,இஷான் கிஷன் (வி.கீ) சூர்யகுமார் (கேப்டன்),திலக் வர்மா,ரிங்கு சிங்,வாஷிங்டன் சுந்தர்,அக்சர் படேல்,அர்ஷ்தீப் சிங்,பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார்.

ஆஸ்திரேலிய அணி:

மேத்யூ வேட் (கேப்டன்), ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ்,ஜோஷ் இங்கிலிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட் அல்லது நாதன் எல்லிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா,