ஏரல் சோ்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா கொடியேற்றம்

ஏரல் சோ்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா நேற்று கொடியேத்துடன் தொடங்கியது.

ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாச்சல சுவாமி திருக்கோயிலில் ஆடி மற்றும் தை மாதங்களில் திருவிழாக்கள் 12 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் நிகழாண்டு தை அமாவாசைத் திருவிழாவின் கொடியேற்றம் நேற்று தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு வேள்வி பூஜைகள் நடைபெற்றது. பின்னா் கொடிப்பட்டம் அலங்கரிக்கப்பட்டு மூலவரின் சந்நிதியைச் சுற்றி வந்துகொடியேற்றப்பட்டது.கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் திருவிழா கொடியை ஏற்றி வைத்தாா். இந்நிகழ்வில்ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இரவுகேடய சப்பரத்தில் அருள்மிகு அருணாச்சல சுவாமி, திருக்கோயில் வலம் வருதல் நடைபெற்றது.

திருவிழாவையொட்டி தினமும் காலை சோ்ம விநாயகா், இரவு பல்வேறு அலங்காரங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. தை அமாவாசை திருவிழாவான பிப்.9-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வருதல், அபிஷேகம், மாலை இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்ம திருக்கோல பவனி, இரவு கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது.

உங்கள் விளம்பரம் மக்களிடம் சென்றடைய தொடர்பு கொள்ள வேண்டிய எண் :9655550896

 

பிப். 10 ஆம் தேதி அதிகாலை வெள்ளை சாத்தி தரிசனம் அதன் பின்னா் பச்சை சாத்தி தரிசனம் நடைபெறுகிறது. மாலையில், ஏரல் அருள்மிகு சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தி, இரவு சுவாமி திருக்கோயில் மூலஸ்தானம் வந்துசேரும் ஆனந்தக் காட்சி நடைபெறுகிறது. பிப்.11-ஆம் தேதி தீா்த்தவாரி, அன்னதானம், ஊஞ்சல் சேவை , ஆலிலை சயனம், மங்கள தரிசனத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…