தூத்துக்குடியில் பிப்.15ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடியில் வரும் பிப்.15ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்”15.02.2024 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் “முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…