தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் சென்னை NSE அகாடமி இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை செப்-22,23 ஆகிய இரு தினங்களாக நடத்தினர்.தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கு சங்கத் தலைவர் தமிழரசு தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து, முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ், NSE அகாடமி மேலாளர் பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக நெல்லை MSME-யின் உதவி இயக்குனர் ஜெரினா பப்பி கலந்து கொண்டார். வேலைவாய்ப்பு முகாமில் 55க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் 500க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.