தூத்துக்குடி சத்யா நகர் மெயின் ரோட்டில் எரியாத மின் விளக்குகள்: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை…

தூத்துக்குடி-திருச்செந்தூர் செல்லும் சாலையில் சத்யா நகர் மெயின் ரோட்டில் மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.


தூத்துக்குடி-திருச்செந்தூர் செல்லும் சாலையில் எப்போதும் வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும். இந்நிலையில், காமராஜர் கல்லூரியில் இருந்து அன்னம்மாள் கல்லூரி அடுத்த பிஎஸ்என்எல் கோட்ரஸ் வரை சாலையில் உள்ள மின்விளக்குகள் எரிகின்றது.

• தூத்துக்குடி டைம்ஸ் • வாட்ஸ்அப்!
 https://chat.whatsapp.com/FWHq80qx4i9GGNt1m3ORk9

ஆனால் சத்யா நகர் மெயின் ரோட்டில் இருந்து துறைமுகம் ரவுண்டானா வரை செல்லும் சாலையில் உள்ள மின்விளக்குகள் எரியாததால் அப்பகுதி முழுவதும் வெளிச்சம் இல்லாமல் இருளாக உள்ளது. இதனால், பொது மக்கள் அச்சத்துடன் இப்பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும் இரவு பணி முடித்து விட்டு வீடு திரும்பும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.எனவே பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உங்கள் விளம்பரம் மக்களிடம் சென்றடைய தொடர்பு கொள்ள வேண்டிய எண் :9655550896