தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுகவின் 52வது தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதற்காக அதிமுக பொதுச் எடப்பாடி கே பழனிச்சாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.

தொடர்ந்து அவர்க்கு தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தூத்துக்குடி விமான நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் எஸ்பி சண்முகநாதன், கடம்பூர் ராஜு, அமைப்புச் செயலாளர் சின்னதுரை, ஆகியோர் பூங்கத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்திலிருந்து காரில் ஏறி புறப்பட்ட வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு விமான நிலைய வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் திரண்டு இருந்த ஏராளமான அதிமுகவினர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற ✅தூத்துக்குடி டைம்ஸ்✅வாட்ஸ் அப் செய்தி சேவையில் இணைந்திருங்கள்;

தூத்துக்குடி டைம்ஸ் channel on WhatsApp:  https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46