இலங்கையில் நிலநிடுக்கம்….ரிக்டர் அளவுகோளில் 6.2ஆக பதிவு.

இலங்கை அருகே இன்று சக்திவாய்ந்த நிலநிடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நிலநடுக்கம் அதிகம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கு தென்கிழக்கே 800 கிமீ தொலைவில் உள்ள இந்திய பெருங்கடலில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கும் பதிவாகியிருப்பதாக இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என இலங்கை புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.