திருச்செந்தூரில் அனுமதியின்றி டிரோன்கள் பறக்கத் தடை

திருச்செந்தூர் பகுதிகளில் அனுமதியின்றி ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோட்டாட்சியர் குருசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;
தமிழகத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், திருமணம், கோயில் திருவிழா, சினிமா, குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் காவல் துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகே டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க அனுமதியுள்ளது. இந்நிலையில், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் தடை செய்யப்பட்ட இடங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள இதர இடங்களிலும் உரிய அனுமதியில்லாமல் டிரோன்கள், மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விட்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்த புகாரை அடுத்து ஐன.26நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை மீறும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை விதித்து அபராதம் மற்றும் டிரோன் கேமிராக்கள் பறிமுதல் செய்யப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.