தீபாவளி சிறப்பு ரயில்கள்:தூத்துக்குடி-சென்னை,சென்னை-தூத்துக்குடி…பொதுமக்கள் மகிழ்ச்சி!

தீபாவளி விடுமுறையை தென் மாவட்ட மக்கள் கொண்டாடும் வகையில் இந்திய ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி- சென்னை,சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எழும்பூர் -தூத்துக்குடி:
வண்டி எண். 06001, சென்னை எழும்பூர் -தூத்துக்குடி,புறப்படும் நாட்கள்:10-11-2023 வெள்ளிக்கிழமை , 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை,
சென்னை எழும்பூர் புறப்படும் நேரம் இரவு 11-45 மணி,தூத்துக்குடி வந்து சேரும் நேரம் மறுநாள் மதியம் 12-30 மணி..
வண்டி எண். 06002,
தூத்துக்குடி -சென்னை எழும்பூர்,புறப்படும் நாட்கள் 11-11-2023 சனிக்கிழமை,13-11-2023 திங்கட்கிழமை,
தூத்துக்குடி புறப்படும் நேரம் மாலை 03-30 மணி,சென்னை எழும்பூர் சென்றடையும் நேரம் மறுநாள் அதிகாலை 04-45 மணி.
நிறுத்தங்கள் : தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்…