கோவை பாரதமாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

கோவை உடையாம்பாளையம் பாரதமாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் பெரும் மழையால் பாதிப்படைந்த தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமபுற மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வழங்குவதற்கு கோவை உடையாம்பாளையம் பகுதியில் இருந்து நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.

பாரதமாதா நற்பணி அறக்கட்டளை கோவையில் 27 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக இயற்கை பேரிடரான சுனாமி, கஜா புயல், கேரளா மழை வெள்ளம் மற்றும் தமிழகத்தில் பேரிடர் காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நேரில் கொண்டு சென்று வழங்கி அவர்களின் துயர் துடைத்துள்ளார்கள்.

இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பாக தென் தமிழகத்தில் ஏற்பட்ட கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் பெருமளவில் மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். இந்நிலையில் அவர்களுக்கு தேவையான உணவு,உடை,அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் தற்போதைய அத்தியாவசிய பொருட்களான பால் பவுடர் ,போர்வை,துண்டுகள், மெழுகுவர்த்தி, பிரட் , பிஸ்கட், நாப்கின், சோப் உள்ளிட்ட பொருட்களை உடையாம்பாளையம் பாரதமாதா நற்பணி அறக்கட்டளையினர் சார்பில் மூன்று நாட்களுக்கு நேரடியாக கொண்டு சென்று வழங்கி அவர்களின் துயர் துடைத்தனர். முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேரிடர் மீட்பு குழுவை சார்ந்த காவல்துறை அதிகாரிகள் -அரசு அதிகாரிகள் -பேருந்து ஓட்டுனர்கள் -மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு காலை உணவை வழங்கினார்கள்‌‌.

இந்நிகழ்வில் கோவை உடையாம்பாளையம் பகுதியில் பாரதமாதா நற்பணி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கௌரிசங்கர் தலைமையில் கார்த்திக், ராஜா ,சரவணன், பிரபு, மெய்யரசன், சுஜன், பிரவீன், சுரேஷ், சக்தி மாதவன், தினேஷ்குமார், டார்வின், குணசேகரன், இளங்கோ, திலீப் குமார் ஆகியோர் நிவாரண பொருட்களை நேரடியாக வழங்கி உதவினார்கள்.

-விளம்பர தொடர்புக்கு:9655550896-