ஆந்திர ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு – அவசர உதவி எண் அறிவிப்பு.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அருகே 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர ரயில் விபத்தில் 19 பேர் மரணமடைந்துள்ளனர்; பலர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டுள்ள தங்களின் உறவினர்களைப் பற்றி தெரிந்து கொள்ள இந்திய ரயில்வே அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

BSNL 08912746330, 08912744619

Airtel – 8106053051, 8106053052

BSNL – 8500041670, 8500041671

3 ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து;

ஆந்திர ரயில் விபத்து காரணமாக 3 ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் 5 ரயில்கள் மாற்று திசையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அதே தண்டவாளத்தில் காத்திருக்கும் 3 ரயில்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.