தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த சான்றிதழ்கள் ஆவணங்களை பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி. லட்சுமிபதி தெரிவித்தார்.

நாளை 28 மற்றும் 29 நாட்களில் இந்த முகாம்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் நடைபெறுகிறது.
பொதுமக்கள் ஆதார், பான் கார்டு, பள்ளி,கல்லூரி சான்றிதழ் உள்ளிட்ட சேதம் அடைந்த அனைத்து ஆவனங்களையும், இந்த முகாமில் விண்ணப்பித்து விரைவாக பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.