பிப்ரவரி 13-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு வருகை..

பிப்ரவரி 13-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு வருகிறார். வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கிய வாய்ந்தவையாக பார்க்கப்படுவதால், தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளை சந்தித்து பேசி வருகின்றனர்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன், கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை நடத்த பிப்ரவரி 13-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ்நாட்டிற்கான தேர்தல் குழு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவில், பா.சிதம்பரம், செல்வப் பெருந்தகை, கே.வி. தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர், குமரி அனந்தன், மணி சங்கர் ஐயர், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட 35 பேர் இடம் பிடித்திருந்தனர்.