சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு!

மதுரை சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் வைத்து குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் கடந்த 2022-ம் ஆண்டு நடந்து முடிந்த குரூப்-4 தேர்வில் சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்த 1000க்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்று உள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு பாராட்டு விழா மதுரை சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் வைத்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அகாடமி நிறுவனர் து.சுகேஷ் சாமுவேல் தலைமை தாங்கி பேசினார். அப்போது, சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் குரூப்-4 தேர்வுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டது. 33 மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால் நீங்கள் நன்றாக பயிற்சி பெற்று வெற்றி பெற்று உள்ளீர்கள். சுமார் 18 லட்சம் பேர் எழுதிய தேர்வில் நீங்கள் வெற்றி பெற்று இருப்பதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் தொடர்ந்து பயிற்சி பெற்றால் குரூப்-1 தேர்வில் வெற்றி பெறலாம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ், நீதித்துறை உதவிபிரிவு அலுவலர் சந்தான கருப்பு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கனிமுருகன், மற்றும் சுதர்சன் கலந்து கொண்டனர்.