தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் விபத்து; ஆட்சியர் அலுவலக ஊழியர் பலி

தூத்துக்குடி அருகே உள்ள ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் இவரது மகன் சக்திசிவன் (28). இவர் தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 18-ந் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மறவன் மடம் அருகே சென்ற போது, திடீரென ரோட்டின் குறுக்கே மாடு சென்றதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த சக்திசிவன் மீட்கப்பட்டு,தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.