தூத்துக்குடி:தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை!

தூத்துக்குடி:தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உப்பாத்து ஓடை கரையோர பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதாலும், இன்றும் (09.01.2024) நாளையும் (10.01.2024) கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் மழைபெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதாலும்,

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உப்பாத்து ஓடை கரையோர பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள.

• தூத்துக்குடி டைம்ஸ் • வாட்ஸ்அப்!
 https://chat.whatsapp.com/FWHq80qx4i9GGNt1m3ORk9

விளம்பரம் தொடர்புக்கு:9789625946-செய்தி தொடர்புக்கு:9655550896