இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பு : கலெக்டர் கோ.லட்சுமிபதி தகவல்

2024 ஆம் ஆண்டிற்கு இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பிற்கான அக்னிவீர் வாயு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 17 முதல் 20 வயது வரையுள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02.01.2004-லிருந்து 02.07.2007 தேதிகளுக்குள் பிறந்திருக்க வேண்டும். கல்வித்தகுதியாக 12 ஆம் வகுப்பில் (இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம்) குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மூன்று வருட டிப்ளோமா பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி, இன்/பர்மேஷன் டெக்னாலஜி) பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 06.02.2024 ஆகும். எழுத்து தேர்வு 17.03.2024 முதல் நடைபெறுகிறது. இரண்டாவதாக உடற் தகுதி தேர்வும் மூன்றாவதாக மருத்துவ பரிசோதனையும் நடைபெறும். இத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை https://agnipathvayu.cdac.in என்ற இணைய தளத்தில் அறியலாம். இந்திய விமானப்படையில் இணைந்து பணியாற்ற விரும்பும் மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் கோ.லட்சுமிபதி, கேட்டுக்கொள்கிறார்.

• தூத்துக்குடி டைம்ஸ் • வாட்ஸ்அப்!
 https://chat.whatsapp.com/FWHq80qx4i9GGNt1m3ORk9

விளம்பரம் தொடர்புக்கு:9789625946-செய்தி தொடர்புக்கு:9655550896