பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வருகை…முன்னேற்பாடு பணிகள் ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு

பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில், கலந்து கொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கவுள்ளார். இதையொட்டி விழா நடைபெறும் இடத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிகழ்வின் போது வ.உ.சி. துறைமுக தலைமைப் பொறியாளர் ரவிக்குமார், தலைமை இயந்திரப் பொறியாளர் சுரேஷ்பாபு, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் உடனிருந்தனர்.

தூத்துக்குடி முக்கிய செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

வாட்ஸ்-அப் – https://chat.whatsapp.com/FWHq80qx4i9GGNt1m3ORk9

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…