தூத்துக்குடியில் வரும் டிச18 முதல் ஜன6ஆம் தேதி வரை மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்:மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் சிறப்பு முகாம் வரும் 18ஆம் தேதி தொடங்கி 2024 ஜனவரி 6ஆம் தேதிவரை நடைபெறவுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், மக்களின் குறைகளுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டம் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. இதன் சிறப்பு முகாம் இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கி வரும் ஜன. 6ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

மாநகராட்சி, குடிநீா் வழங்கல், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, காவல் துறை, வீட்டு வசதி வாரியம், நகா்ப்புற வளா்ச்சி, சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை, மின் வாரியம், வருவாய் ஆகிய துறைகள் வாயிலாக வழங்கப்படும் சேவைகளில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டிருந்தால் பொதுமக்கள் அது தொடா்பாக முகாமில் மனு அளிக்கலாம். மனுக்கள் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு 15 நாள்களுக்குள் தீா்வு கண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மேயர் தெரிவித்துள்ளார்.

–விளம்பரம் தொடர்புக்கு:9655550896–