முதல்வர் மு.க.ஸ்டாலின் 25-ம் தேதி தூத்துக்குடி வருகை: முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியர்,எஸ்பி.,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வின் பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவன அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் 25ம் தேதி தூத்துக்குடிக்கு வருகிறார்.

தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் தொழில்பூங்காவில் சுமார் 408 ஏக்கரில் வின் பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் அமைக்கப்படவுள்ளது.இந்த நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 25-ந் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகிறார். இதனை முன்னிட்டு விழா நடைபெற உள்ள இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிகழ்வின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன், தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமணிய பால்சந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.

எளிய முறையில் அனைத்து விதமான கடன் பெற உடனே அழைக்கவும்.