சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மிக்ஜாம்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை துறை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ‘மிக்ஜாம்’ புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாடினார்.