கனமழை எதிரொலி:சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் மூடப்படும் என அறிவிப்பு

சென்னையில் கனமழை காரணமாக, டிசம்பர் 5ம் தேதி காலை 10 மணி வரை சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் ஆலந்தூர், நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கை மக்கள் பயன்படுத்திக்கொள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
பரங்கிமலை மெட்ரோ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தியுள்ள பயணிகள், தங்கள் வாகனங்களை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.