தூத்துக்குடி ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா:

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் மிக சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வெகு விமரிச்சையாக கொண்டாடப்பட்டது.


இதையொட்டி நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை அமைச்சர் பெ.கீதாஜீவன், மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் நடைபெற்ற பூஜைகளில் சமூக நலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி, என்.பி.ராஜா, என்.பி.அசோக் மற்றும் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் மாநகராட்சி கவுன்சிலர் கீதாமுருகேசன், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோட்டுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.