தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 5 சவரன் தங்க நகையை பறித்தவர் கைது

தூத்துக்குடி டி.சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த சாமி மனைவி பாப்பா (64) என்பவர் நேற்று (30.11.2023) டி.சவேரியார்புரம் சமுதாயகூடம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சைக்கிளில் வந்த மர்ம நபர் பாப்பா அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார்.

இதுகுறித்து பாப்பா அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில், உதவி ஆய்வாளர் மரியஇருதயம், சிறப்பு உதவி ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் காவலர் சத்ரியன் ஆகியோர் அடங்கிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஜேசுபாலன் (42) என்பவர் பாப்பாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து ஜேசுபாலனை கைது செய்து, அவரிடமிருந்து 5 சவரன் தங்க நகையும் பறிமுதல் செய்தார்.