தூத்துக்குடியில் மினி பேருந்தில் பெண்ணிடம் 4½ பவுன் தங்கச் செயின் பறிப்பு

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் முத்துமணி மனைவி அலிஸ் எபனேசர் (56). இவர் சம்பவத்தன்று 3வது மைல் பகுதியில் இருந்து மினி பஸ்சில் ஏறி பயணம் செய்துள்ளார்.

பின்னர் அவர் பேருந்தில் இருந்து இறங்கிய போது கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்கச் செயின் மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பேருந்தின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயினை திருடிச்சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.