கோவில்பட்டி அருகே மரத்தில் கார் மோதியதில் வழக்கறிஞர் உள்பட இரண்டு பேர் பலி

திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சின்னச்சாமி மகன் லட்சுமணன் (75) . வழக்கறிஞரான இவர் நேற்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றுள்ளனர். திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சின்னச்சாமி மகன் லட்சுமணன் (75) . வழக்கறிஞரான இவர் நேற்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றுள்ளனர்.

சாமி கும்பிட்டு விட்டு இன்று காரில் ஊருக்கு திரும்பி உள்ளனர். தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபட்டி பகுதியில் சென்ற போது கார் தீடிரென நிலை தடுமாறி , நடுவில் இருந்த சென்டர் மீடியாயவை தண்டி அப்பகுதியில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  வழக்கறிஞர் லட்சுமணன், டிரைவர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் வந்த கதிர்,சுலேக்சனா, மஞ்சூரி, நந்தன் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.