தூத்துக்குடியில் காரில் கஞ்சா கடத்தியவர் கைது:1 கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடியில் விற்பனைக்காக காரில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று (25.11.2023) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ராஜகோபால்நகர் பகுதியில் காருடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை மகன் விக்னேஸ்வரன் (எ) விக்கி (33) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விக்னேஸ்வரன் (எ) விக்கி என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.