தூத்துக்குடியில் காற்றின் வேகம்; நங்கூரம் அருந்து படகு சேதம்.

தூத்துக்குடி கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்சு என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் நங்கூரம் அருந்ததில் காற்றின் வேகத்தில் திசை மாறி முத்து நகர் கடற்கரை பகுதியில் தரைதட்டி நிற்கிறது. படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி கடல் பகுதியில் 45 கிலோமீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீச கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பை தொடர்ந்து இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை தங்கள் படகுகளை மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை
சேர்ந்த சம்சு என்பவருக்கு சொந்தமான நாட்டு படகு திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் நேற்று இரவு கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக நாட்டுப்படகின் நங்கூரம் அருந்து கடல் பகுதியில் நாட்டுப்படகு திசை மாறி சென்று முத்துநகர் கடற்கரை பகுதியில் தரைதட்டி நிற்கிறது. இதைத் தொடர்ந்து முத்துநகர் கடற்கரை பகுதியில் தரை தட்டி நிற்கும் நாட்டு படகை மீட்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த விபத்தில் ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாக படகு சேதமடைந்துள்ளது. தமிழக அரசு தங்களுக்கு இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் தொடர்புக்கு: தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள்,போராட்டங்கள் மற்றும் பல்வேறு செய்திகள் குறித்து தகவல்களை செய்திகளாக வெளியிட WHATSAPP NUMBER :9655550896 தொடர்பு கொள்ளவும்….

–விளம்பரம் தொடர்புக்கு CALLNOW-9655550896–