கேரளாவில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை!

கேரளாவில் 2021ம் ஆண்டு பாஜக ஓபிசி பிரிவு தலைவர் ரஞ்சித் சீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்து கேரள மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளா ஆலப்புழா நகராட்சியின் வெள்ளக்கிணற்றில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீனிவாசன் குற்றவாளிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலை செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியில் ரஞ்சித் ஸ்ரீனிவாசன், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்தார்.இந்த வழக்கை விசாரித்த மாவேலிக்கரா நீதிமன்ற நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி, கொலை வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீர்ப்பை ரஞ்சித் ஸ்ரீனிவாசனின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

காவல்துறை விசாரணையில் எஸ்டிபிஐ மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் கொலைக்கு பதிலடியாக ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொல்லப்பட்டதாகத் தெரியவந்தது.