ஆந்திராவில் பறவை காய்ச்சல்:தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

ஆந்திராவின் நெல்லுாரில் பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலம்,நெல்லூர் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில்,அங்குள்ள 10 ஆயிரம் கோழிகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்துள்ளது.நெல்லூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் மூன்று மாதங்களுக்கு சிக்கன் கடைகளை திறக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிர படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் 5 மாவட்டங்களுக்கு

அனுப்பிஉள்ள கடிதம்:கோழிகள், காட்டு பறவைகள் மற்றும் அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில், பறவை காய்ச்சல் பாதிப்பு பரவும் வாய்ப்பு உள்ளது. காய்ச்சல், தலைவலி, கை, கால் தசைபிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறியாகும்.எனவே, கால்நடை துறையுடன் இணைந்து, பறவை காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.இவ்வகை வைரஸால் பாதிக்கப்படும் பறவைகள் மற்றும் மனிதர்கள் குறித்து தகவல், பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கு சுகாதாரமாக இருத்தல், கை கழுவுதல், பாதிக்கப்பட்டவர்களிடருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முககவசம் கட்டாயம் அணிதல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

எளிய முறையில் அனைத்து விதமான கடன் பெற உடனே அழைக்கவும்.