தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவர் மனைவி அகிலா. இவர் நேற்று காலையில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அப்போது மருத்துவமனைக்கு எதிரே வாகனத்தை நிறுத்திவிட்டு , சாவியை எடுக்காமல் உள்ளே சென்றதாக தெரிகிறது. மருத்துவ பரிசோதனை முடிந்து வெளியே வந்த பார்த்த போது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் மருத்துவமனை பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கைலி அணிந்து போக்வுடன் வந்த ஒரு மர்ம நபர் அந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்லுவது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.