தூத்துக்குடியில் பைக் எரிப்பு:17 வயது சிறுவன் உட்பட 2 பேர் கைது

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜா (எ) அந்தோணி மகன் மோஹித் (20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜவஹர் மகன் ஆகாஷ் (20) என்பவரிடம் ரூ.2500 கடன் வாங்கினாராம். அதனை திருப்பி கொடுக்காதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று பணத்தை கேட்டு ஆகாஷ் மற்றும் அவரது நண்பரான 17 வயது சிறுவன் ஆகியோர் மோஹித் வீட்டிற்கு சென்று அவரது அம்மா சாந்தியிடம் தகராறு செய்தார்களாம். மேலும் வீட்டின் முன் நிறுத்தியிருந்த ரூ.1லட்சம் மதிப்புள்ள புல்லட் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டார்களாம்.

இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து ஆகாஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.